உலக மகா நடிப்புடா சாமி:
வெள்ளி திரையிலும், சின்ன திரையிலும் நடிகர்களின் நடிப்பை பார்த்து பிரமித்து வியந்து ரசித்திருக்கிறோம்.... ஆனால் அதையே உங்கள் பார்வையில் நேரில் பலர் நடித்துக்கொண்டிருக்கின்றனர் ... அதையும் தான் கொஞ்சம் ரசித்து(......) பார்ப்போமே...
நாடகமேடை இவ்வுலகம்
நடிகர்கள் நாம் அதில்
· நெஞ்சிலே நஞ்சு கொண்ட வஞ்சகர்கள் நல்லவர்கள் போல் பேசுவார்கள் ; நடந்து கொள்வார்கள்.
·
· உருவ அமைப்பு, தோற்றம், அணிந்திருக்கும் உடைகள் குரல் ஒலியை வைத்து யாரையும் சாதாரணமாக எடை போட்டு விடுவார்கள். இதனால் நல்லவர்களையும், கெட்டவர்களாக நினைப்பார்கள். போவோர், வருவோரைப் பார்த்து புறம் பேசுவார்கள், தூற்றுவார்கள்.
· இரு கோஷ்டிகளுக்கும் இடையே குஷ்தி, சண்டை, கைகலப்பு, நடந்து இருக்காது. வாய்ப்பேச்சு அளவிலே மட்டும் தகராறு நடந்து இருக்கும். ஆனால் அடித்தார்கள் , உதைத்தார்கள், சித்ரவதை செய்து கொடுமை படுத்தினார்கள் என கூனியும் குறுகியும் உடம்பை வளைத்தும் நிமிர்த்தியும் நெளிந்தும் காண்பிப்பார்கள். குரல் ஒலியுலும் வெளிப்படுத்துவார்கள்.
· இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் ஒருவர் அடி, உதை வாங்கி இருப்பார். ஆனால் கூனி, குறுகாமல் உடம்பை வளைத்து, நிமிர்த்தாமல் அடி உதை சித்ரவதைக்கு கொடுமைக்கு ஆளாகவில்லை என ஒன்றுமே நடக்காத மாதிரி பந்தா பண்ணுவார்கள்.
· கண்களால் பார்க்காததைப் பார்த்த்தாகவும், பார்த்ததைப் பார்க்கவே இல்லை, எனவும் தம் கண்களால் பிரதிபலித்துக் காட்டுவார்கள்.
· தம் வாயினால் சொல்லாததை, சொல்லியதாகவும், சொன்னதை சொல்லவே இல்லை என்றும் மறுப்பார்கள், வாக்கு வாதம் பண்ணுவார்கள்
· தம் காதுகளால் கேட்ட தை, கேட்கவே இல்லை என்றும் , கேட்காத்தை கேட்டேன் என்றும் சாதிப்பார்கள்.
· நடக்காத்தை நடந்த மாதிரியும், நடந்த்தை நடக்காத மாதிரியும் பாசாங்கு செய்வார்கள்.
· இல்லாத ஒன்றை இருப்பது போலவும் , இருக்கின்ற ஒன்றை இல்லாத்து போலவும் பிரமையை ஏற்படுத்துவார்கள்.
· தெரிந்த்தை தெரியாத்து போலவும், தெரியாத்தை போலவும் மிகவும் அலட்டிக்கொள்வார்கள்
· பொய்யை உண்மை போலவும், உண்மையைப் பொய் போலவும், பேசும் தோரணையிலே சாமர்த்தியமாக மறைப்பார்கள்; சமாளிப்பார்கள்; நிருபிக்க முயலுவார்கள்
நன்றி - ஆசிரியர் திரு.சுதர்சனா அவர்கள் (நடிப்பு கலை என்ற புத்தகத்திலிருந்து)
w
w
யார் எப்படி நாடகமாடுனா நமக்கென்ன நாம நார்மலா இருப்போம் சரி தான நண்பர்களே...
டிஸ்கி: என்ன நண்பர்களே சும்மா போறீங்க ஓட்டு பெட்டியில் நாலு ஊம குத்தா குத்திட்டுப்போங்க....
