பாட்டியிடம் சுட்ட பழமொழிகள்
கடவுளிடம் கேட்டால் – கிடைக்காதது ஒன்றுமில்லை.
பக்தியோடு பிரார்த்தனை செய், ஆனால் சுத்தியலைப் பலமாய் அடி.
உதட்டினால் மட்டும் செய்யப்படும் பிரார்த்தனை பலன் தராது.
ஒருவன் கடவுளை நோக்கி நொண்டிச் செல்கிறான், ஒருவன் சைத்தானை நோக்கி குதித்தோடுகிறான்
தீயோர் நேசத்தை விட தனிமை மேலானது.
அறையில் ஆடினால் தான் அம்பலத்தில் ஆட முடியும்.
ஆடிய காலும், பாடிய நாவும் சும்மா இராது.
கலைகளில் ஈடுபாடுடையவன் கவலைகளை மறக்கிறான்.
அறிவின் தந்தை ஞாபகசக்தி; அதன் தாய் சிந்தனை.
வதந்தி தந்தியை விட வேகமானது.
முறத்தடி பட்டாலும் முகத்தடி படக்கூடாது.
நீண்ட கால விரோதியை நம்பாதே.
இனிய முகம் உறவை வளர்க்கும்.
கெட்டிக்காரப் பெண் – தான் காதலிப்பவனை விட்டுவிட்டுத் தன்னைக் காதலிப்பவனைத் தான் மணப்பாள்.
பெண்ணில்லாத வீடு பேய் வாழும் இடம்.
தாயைப்பார்த்து மகளை மணம் செய்.
நூலைப் போல செலை, தாயைப் போல சேய்.
தன் முகத்தைப் பற்றியே பெருமைப்படும் ஒரு பெண்ணால், வீடானது பாழாகும்.
சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம்; அறுவடை மோசமானால் ஓராண்டு நஷ்டம்; விவாகம் மோசமானால் வாழ்நாள் முழுதும் நஷ்டம்!
தாயை யாருடனும் ஒப்பிடலாகாது; அவள் ஒப்பற்றவள், ஆனால் அவள் நல்லவளாக – இருந்தால் மட்டுமே.
மகன் செத்தாலும் பரவாயில்லை-மருமகள் கொட்டம் அடங்கட்டும்.
பணிவோடு பேசுபவனைப் பயந்தாங்கொள்ளி என்று நினைப்பவன் படுமுட்டாள்.
டிஸ்கி: ஆஹா மறந்துட்டீங்களே! எப்பவும் போல ஓட்டு பொட்டியில நாலு ஊமக்குத்து குத்திட்டுப்போங்க








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக