திங்கள், 5 டிசம்பர், 2011
புதன், 16 நவம்பர், 2011
செவ்வாய், 15 நவம்பர், 2011
கூடா நட்பு கூடாது!
நட்பின் பிணைப்பையும், இணக்கத்தையும் சொல்லும் ஓர் அசத்தலான வாசகமாய் இதைக் கொள்ளலாம்.
நட்பு இல்லாத மனிதன் இருக்க முடியாது. எல்லோருக்கும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். சில நண்பர்கள் ஆரம்ப கால அரை டவுசர் வாழ்க்கையோடு விடைபெறுகிறார்கள். சிலர் கல்லூரி கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓடி ஓய்ந்து விடுகிறார்கள்.
வெகு சில நண்பர்களே இந்த எல்லைகளை எல்லாம் தாண்டி நமது இதயத்தின் மேடையில் கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையின் பாதையில் நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக் கொண்டுவிடுகிறது.
ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். சரியான பாதையில் கப்பலைச் செலுத்தும் ஒரு மாலுமியைப் போல இருக்க வேண்டும் நல்ல நண்பன். 'கூடா நட்பு கேடாய் முடியும்' என வள்ளுவர் அந்தக் காலத்திலேயே அழுத்தமாய்ச் சொன்னதன் காரணம் அதுதான்.
இன்றைய இளைஞர்கள் பலரும் இந்த 'நட்புத் தேர்வு' ஏரியாவில் தவறி விடுகிறார்கள்.
'வாடா... தண்ணியடிக்கலாம்' என்று அழைப்பதுதான் உண்மை நட்பின் அடையாளமென நினைத்து விடுகிறார்கள்.
உண்மையான நண்பன் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவான்... உங்களுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவான்... உங்களைத் தீய வழியில் இழுக்க மாட்டான்... என்பதை மனதில் அழுத்தமாய் எழுதுங்கள்.
ஒருவேளை நீங்கள் புகை, மது போன்ற பழக்கங்களில் இருந்தால் உங்களை அதில் இருந்து வெளியே கொண்டு வருவதுதான் உண்மையான நண்பனின் பண்பு. அதை உற்சாகப்படுத்துவது அல்ல.
நல்ல நண்பன் உங்கள் தவறுகளைக் கடிந்து கொள்வான். உங்கள் மனம் கோணாமல் எப்போதும் நல்ல விஷயங்களையே சொல்லிக் கொண்டிருப்பவன் ஆத்மார்த்த நண்பன் அல்ல. நல்ல நண்பன் நாளைய வாழ்வில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் எனும் ஆர்வம் கொள்பவன். அப்படிப்பட்டவர்கள் உங்கள் குறைகளை உங்களிடம் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டார்கள். அதற்காத நட்பே போனால் கூட கவலைப்பட மாட்டார்கள்.
'நான் தண்ணியடிக்கிற விஷயத்தை அப்பாகிட்டே சொல்லாதே' என்பது போன்ற சத்தியங்களை நல்ல நண்பன் கண்டு கொள்வதில்லை. சில நேரங்களில் சத்தியம் கூட மீறப்படலாம் என்பது உண்மைத் தோழனுக்குத் தெரியும்.
உங்களுடைய லட்சியங்களை உங்கள் நண்பன் ஆதரிக்கிறானா? அல்லது அவனுடைய செயல்பாடுகள் உங்களுடைய லட்சியத்துக்குத் தடைக்கல்லாய் இருக்கிறதா? என்பதைப் பாருங்கள். உங்களுடைய லட்சியங்களைக் கிண்டலடிப்பவனோ, அதை நோக்கிய உங்கள் பயணத்தின்போது உங்களுக்கு ஊக்கமளிக்காமல் இருப்பவனோ உங்களுடைய நண்பன் அல்ல.
உண்மையான நண்பன் உங்களுடைய திறமைகளை முழுமையாய்ப் பயன்படுத்த ஊக்குவிப்பான். உதாரணமாக, ஓர் இசைக்கலைஞன் ஆவது உங்கள் லட்சியமெனில், அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் எனும் விஷயங்களில் உங்களுக்கு உதவி செய்வான். உங்களைப் படிப்படியாய் அந்தப் பாதையில் நடத்துவான். வெறுமனே உங்களுடைய வெற்றிகளில் வந்து கை குலுக்கிவிட்டுப் போகும் மனிதனாக அவன் இருப்பதில்லை.
மற்ற நண்பர்களைப்பற்றி உங்களிடம் தரக்குறைவாக விமர்சிக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் உஷாராய் இருங்கள். உங்களைப் பற்றி அவர்கள் வேறு நண்பர்களிடமும் அதே போலப் பேசித் திரியும் வாய்ப்பு உண்டு. நீங்கள் எந்த நண்பனுடன் இருக்கும்போது அடுத்தவர்களைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்களை அவிழ்க்கிறீர்கள் என யோசியுங்கள். அந்த நண்பன் நல்ல நண்பன் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
உண்மை நண்பர்கள் உங்களுடைய சந்தோஷத்தின்போது காணாமல் போனாலும், உங்களுடைய துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள். தங்களைப் பற்றிய தம்பட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடைய உரையாடலைக் கவனமுடனும், ஈடுபாட்டுடனும் கேட்பது நல்ல நண்பனின் அடையாளம்.
'மனசுக்கு கஷ்டமாயிருக்கு, பணக் கஷ்டமாயிருக்கு, உதவி தேவையிருக்கு' என கஷ்டம் என்றால் மட்டுமே உங்களிடம் வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள். நட்பின் முக்கியத் தேவையே உதவுவதில்தான் இருக்கிறது. ஆனால் அத்தகைய சூழல்களில் 'மட்டுமே' உங்களைத் தேடி வரும் நண்பர்கள் சுயநலத்தின் சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
சில நண்பர்கள் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போலத் தலையாட்டும் நண்பர்களே வேண்டுமென்பார்கள். அவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல. அவர்களுடைய நட்பில் வீசுவதும் சுயநல வாசமே.
'தப்பான' ஒரு செயலைச் செய்ய உங்களை ஊக்கப்படுத்துபவன் உங்கள் நண்பனல்ல என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்டவர்களை நீங்கள் முளையிலேயே கிள்ளி எறியலாம். போதை, திருட்டு, பாலியல், சமூக விரோதச் செயல் போன்ற பல தவறுகளுக்கு இளைஞர்களை இட்டுச் செல்வதில் பெரும்பாலான பங்கு நண்பர்களையே சாரும். அத்தகைய ஒழுக்கத்தை மீறிய செயல்களுக்குள் உங்களை இழுப்பவர்கள் உங்கள் எதிரிகளே, நண்பர்கள் அல்ல.
நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். 'எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு நட்பாய் இருப்பேன்' என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி விடுங்கள்.
உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா? என்று பாருங்கள். எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.
சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.
உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள். அவர்கள் நல்லவர்களா, மோசமானவர்களா என இப்போது அளவிடுங்கள். தீய நண்பர்களெனில் ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகுவதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச் சிறந்தது.
கடைசியாக ஒன்று. நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள்!
நட்பில் உண்மை நிலவட்டும்
திங்கள், 14 நவம்பர், 2011
புதன், 2 நவம்பர், 2011
வாழ்க நகைச்சுவை !
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
துக்ளக் 19.10.2011 இதழில் வெளியான கேள்வி–பதில் பகுதியைப் படித்தேன். கேள்வி கேட்ட சென்னையைச் சேர்ந்த நண்பர் ஆர்.நாகராஜன் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லையே என்று வருத்தம் அடைந்தேன். தங்களுடைய பதிலைப் பார்த்தவுடன் தங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறது என்பது ஆறுதல் அளித்தது. அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 27-ஆம் பக்கத்திலும் மற்றும் 35-ஆம் பக்கத்திலும் வெளியான கேலிச் சித்திரங்களைப் பார்த்த பிறகு, தங்களுடைய ஆசிரியர் குழுவில் பலருக்கு நகைச்சுவை உணர்வு இல்லையோ என்று கேட்கத் தோன்றுகிறது.
‘வாழ்க நகைச்சுவை’ – என்று சொல்லும் காலம் வரும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி!
– ப. சிதம்பரம்,
உள்துறை அமைச்சர், புதுடெல்லி.
அவர் குறிப்பிட்டுள்ள கேள்வி பதில், கார்ட்டூன் கீழே....
கேள்வி-பதில்
ஆர். நாகராஜன், சென்னை-117
கே : ‘எனக்குச் சற்று ஞாபக மறதி உள்ளது’ – என்று உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ப.சிதம்பரம் பகிரங்கமாகக் கூறுகிறாரே?
ப : 2ஜி விவகாரத்தில் ஏல முறையை வற்புறுத்த சிதம்பரம் தவறினார் என்ற குற்றச்சாட்டைக் கூறுகிற நிதியமைச்சகத்தின் குறிப்பு பற்றியும், பின்னர் பிரணாப் முகர்ஜிக்கும் சிதம்பரத்திற்கும் ஏற்பட்ட ‘சமாதானம்’ பற்றியும், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில்தான், சிதம்பரம் ‘தனக்கு ஞாபக மறதி’ என்று கூறினார்.
நிருபர்களின் சில கேள்விகளுக்குப் பதில் அளிக்க விரும்பாதவர்கள், ‘இது பற்றி எதுவும் சொல்வதற்கில்லை’ என்று கூறுவார்கள். அல்லது ‘இப்போது கருத்து தெரிவிக்கவில்லை’ என்று கூறுவார்கள். சிலர் வேறு விதங்களிலும் பதில் சொல்வார்கள். அந்த மாதிரிதான் சிதம்பரமும் ‘தனக்கு ஞாபக மறதி’ என்று கூறியும், ‘தனக்கு கணக்குத் தெரியாது’ என்று சொல்லியும் சில கேள்விகளைத் தவிர்த்தார்.
இதை ஒரு நகைச்சுவையாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, சீரியஸாக எடுத்துக் கொண்டு, ‘சிதம்பரத்திற்கு ஞாபக மறதியா? அவருக்குக் கணக்குத் தெரியாதா?’ என்று கேட்பதில் அர்த்தமில்லை.
கார்டூன்

2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, அப்பப்போ குண்டு வெடிக்கும் போது தரும் அறிக்கையைவிடவா இது பெரிய நகைச்சுவை ? வாழ்க நகைச்சுவை! என்று சொல்லும் காலம் நிச்சயம் வரும்!
வியாழன், 20 அக்டோபர், 2011
சனி, 15 அக்டோபர், 2011
வியாழன், 15 செப்டம்பர், 2011
தமிழக அரசு வழங்கும் ஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்
மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே மரங்களை சார்ந்து தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சி இருந்திருக்கிறது. முதலில் மனிதனின் உணவுக்காக மட்டுமே பயன்பட்ட மரங்கள், பின்னர் இருப்பிடத்திற்காகவும், எரிபொருளாகவும் பயன்பட்டது.மனிதனின் தேவைக்கான காடுகள் அதிக அளவில் அழிக்கப்பட்டு விட்டதால் தற்போது மரங்களை வளர்ப்பதற்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. நமது நாட்டில் தற்போது இருக்கும் கால்நடைகளில் எண்ணிக்கைக்கும், அவற்றுக்கு கிடைக்கும் தீவனத்திற்கும் இடையிலான வித்தியாசம் மிகப்பெரிய அளவில் பற்றாகுறையானதாக இருக்கிறது.
கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை விளைநிலங்களிலிருந்து பெற முடியாத நிலையில், கணிசமான தீவனத்தை வேளாண் காடுகளிலிருந்து பெற முடியும். குறிப்பாக இப்போது அரசு மக்களுக்கு ஆடு, மாடுகளை வழங்கி வரும் நிலையில் இவற்றுக்கான தீவனமாக, மரங்களை பயன்படுத்தும் வகையில் குறிப்பிடத்தக்க தீவன மரங்களை கிராமங்களில் காலியான நிலங்களில் வளர்த்து ஆடு, மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம். இதனால் தமிழகம் கால்நடை செல்வங்களின் பெருக்கத்தில் முதன் மாநிலமாக மாறும். மக்களின் தேவைக்கேற்ற பால் மற்றும் இதர கால்நடை உற்பத்தி பொருட்கள் எளிதாக கிடைக்கும்.
கால்நடை தீவனமாக பயன்படும் மரங்கள்
கால்நடைகளுக்கு தீவனமாக பல மரங்களும் பயன்படுகின்றன. இப்படி பயன்படும் தீவன மரங்களை பார்க்கலாம்.சவுண்டல், வாகைமரம், வெள்வேல், ஆச்சாமரம், புங்கை மரம் ஆகியவை மிகச்சிறந்த தீவன மரங்களாக இருக்கின்றன. இந்த மரங்களின் தழைகளில் கால்நடைகளுக்கு தேவையான புரதச்சத்து 13 முதல் 30 சதவீதம் வரை இருக்கிறது. சில மரங்களில் சத்துக்குறைவாக இருந்த போதிலும் அவற்றை மற்ற மரத்தழைகளுடன் சேர்த்து அளிக்கும் போது, கால்நடைகளுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்கின்றன.
தீவன மரங்களான சவுண்டல், கருவேல் ஆகியவற்றுக்கு இடையே தீவனப்புல் வகையான கொழுக்கட்டைப்புல், ஊசிப்புல் ஆகியவற்றை வளர்க்கும் பட்சத்தில் அவற்றிலிருந்து கிடைக்கும் தீவனத்தைக் கொண்டு 5 பெட்டை மற்றும் 1 தலைச்சேரி இன வெள்ளாடுகளை வளர்க்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தீவன மரங்களை விவசாயிகள் முக்கிய பயிராகவோ அல்லது வரப்பு ஓரங்களிலும், தரிசுநிலங்களிலும், கண்மாய் கரைகளிலும் வளர்க்கலாம்.
வேளாண் காடுகள்
தீவன மரங்களின் இலைகள் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிரம்பியதாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் பயன்படுகின்றன. உதாரணமாக, முள்ளுமுருங்கை மரத்தை எடுத்துக் கொள்ளலாம். முள்ளு முருங்கை மரங்களின் இலைகளிலிருந்து தான் மனிதர்களின் சுவாச கோளாறுகளுக்கான முக்கிய மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான மரங்களை ஆங்காங்கே நடும் போது அது, ஆடு, மாடுகள் மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பயன்படும்படி அமைத்துக் கொள்ளலாம். நடப்படும் மரத்தின் இனத்தை பொறுத்து இந்த பயன்பாடு அமையும். பொதுவாக இது போல் தீவன மரங்களை நட்டு வளர்க்கும் இடத்தை வேளாண் காடுகள் என்று கூறலாம். ஆங்கிலத்தில் இதனை சில்விபேச்சர் என்கிறார்கள்.
வேளாண் காடுகளின் அமைப்புகள்
வேளாண்காடுகள் என்பது இயற்கையில் மிகப்பெரிய பரப்பளவில் உருவாகியிருக்கும் காடுகள் போல் அல்ல. அது மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படுவது. இவற்றை கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.
1. விவசாய பயிர்கள் பயிரிடப்படும் இடங்களில் தீவன மரங்களை வளர்த்தல். அதாவது, வயல் ஓரங்கள், குளம், கண்மாய், ஏரிகளின் ஓரங்கள் என்று கிராமங்களில் பொதுவான இடங்கள் உள்பட பயிர் வளர தகுதியான இடங்களில் எல்லாம் தீவன மரங்களை வளர்ப்பது.
2. தீவனப்புல் வகைகள் மற்றும் மேய்ச்சல் தரைகள் அமைந்திருக்கும் இடத்தில் தீவன மரங்களை நட்டு வளர்த்தல். அதாவது, ஒரு விவசாயி கால்நடைகளையே தனது முக்கிய தொழிலாக கொண்டிருந்தால், அவருக்கு சொந்தமான நிலத்தில் கால்நடைகளுக்கு உணவாக பயன்படும் புல்வகைகள் சிலவற்றை பயிரிடலாம். கூடவே தீவன மரங்களையும் ஒரே இடத்தில் வளர்க்கலாம்.
3. விவசாய பயிர்களுடன் பழ மரங்களை வளர்த்தல். பல்வேறு பழமரங்களின் இலைகள் கூட கால்நடைகளின் தீவனமாக பயன்படும். இதனால், விவசாய பயிர்களுடன் பழமரங்களையும் ஆங்காங்கே நட்டு வளர்க்கலாம்.
4. மரங்கள், பழமரங்கள் ஆகியவற்றுடன் கால்நடைகளுக்கான தீவன புல்வகைகளை வளர்த்தல். அதாவது சில வகையான புற்கள் மரங்களின் அடியில் கூட எளிதாக வளர்ந்�AF�து அவற்றிலிருந்து கிடைக்கும் சாணம் நிலத்திற்கு சிறந்த இயறள், பழமரங்களுக்கு இடையில் பயிர் செய்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.
இப்படியான வழிவகைகளில் தீவன மரங்களையும், தீவன புற்களையும் வளர்க்கும் போது அவற்றிலிருந்து கிடைக்கும் இலை, தழைகள் கால்நடைகளுக்கு எளிதான உணவாக கிடைக்கும். இதனால் தீவன செலவு பெரிதும் குறைந்து விடும். கால்நடைகளை வளர்க்கும் போது அவற்றிலிருந்து கிடைக்கும் சாணம் நிலத்திற்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படும். இதனால் கடந்த பல ஆண்டுகளாக ரசாயன உரத்தினால் பாழ்பட்டு தற்போது தனது வளத்தை இழந்திருக்கும் தமிழகத்தின் விளைநிலங்கள் பலவும் மிகவிரைவில் பொலபொலப்பான இயற்கையாகவே சத்துள்ள நிலமாக மாறிவிடும்.
மேற்சொன்ன முறையில் தீவன மரங்களை வளர்க்கும் முறைக்கான ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.
அதாவது, சவுக்குமரத்தை ஒரு இடத்தில் பயிரிடும் போது அதே மரங்களின் இடையில் மக்காச்சோளத்தை பயிரிடலாம். இதனால் கால்நடைகளுக்கு தேவையான மக்காச்சோளம் பெரிய அளவில் செலவில்லாமல் ஆண்டு முழுவதும் கிடைத்துக் கொண்டே இருக்கும். சவுக்கை தனியாக விற்று லாபம் பார்க்கலாம்.
இது போல் வாகை மரத்தின் ஊடே கொழுக்கட்டை புல்லையும், சவுண்டல் மரத்தின் இடையே பி.என்2 புல் வகையையும், சவுக்கு மரத்தின் இடையே மக்காச்சோளம், சோளம், காராமணி போன்ற தீவனப்பயிர்களையும் பயிரிடலாம். இப்படி பயிரிடும் போது ஒரு ஏக்கரிலிருந்து 15.81 டன் அளவுக்கு சோளத்தீவன பயிர் கிடைக்கும்.
இது தவிர அதே ஒரு ஏக்கரில் வளர்க்கப்படும் சவுண்டல் மரத்திலிருந்து 5.30 டன் அளவுக்கு உலர் தீவனமும், வாகை மரம் எனறால் 6.63 டன் அளவுக்கு உலர் தீவனமும் கிடைக்கும்.
எனவே, தற்போது தமிழகத்தில் ஆடு, மாடுகள் வளர்ப்பை அதிகரிக்க தீவிரமான முயற்சி எடுக்கப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் வேளாண்காடுகளையும் அதிகரித்தால் விவசாயிகள் செலவில்லாமல் அதிக வருமானம் பெறலாம்.தீவன மரங்களை கிராமங்கள் தோறும் நடுவதால், கிராமங்களில் எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் என்று மரங்கள் வளர்ந்து நிற்கும். கிராம மக்களும் தங்களுக்கு தேவையான எரிபொருளுக்காகவும் இவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் கிராம மக்கள் சுவாசிக்க சுத்தமான பிராணவாயுவும் இந்த மரங்களிலிருந்து கிடைக்கும். சாணஎரிவாயு கலன் அமைத்து மின்சாரம் தயாரிக்கலாம். இப்படி பலபல பலன்களை ஒன்றன் பின் ஒன்றாக செய்து கொண்டே போகலம். ஆகவே, கிராமத்திலிருந்து வந்து நகரத்தில் தற்போது வசித்து வரும் இளைஞர்கள் தங்களது கிராம மக்களுக்கு இந்த தகவல்களை கொண்டு சேருங்கள். உங்கள் கிராமமக்கள் பலன் பெறட்டும். சமுதாயம் அமைதியாக முன்னேறட்டும்.
சாகும் வரை உண்ணாவிரதம் day-4
பாரதியின் அரிய புகைப்படங்கள்!
"பாபா ராம்தேவ் மாதிரி இருக்காரு பாரதி...ஆனா போட்டோவில் எல்லாம் வேற மாதிரி இருக்காரே போட்டோஷாப்பில் தாடியை எல்லாம் ட்ரிம் செஞ்சி...மீசைய எல்லாம் முறுக்கிவுட்டு வரலாறு முக்கியம் அமைச்சரே எனப்து போல் போட்டோவை ரிலீஸ் செஞ்சது யாரு? " என்று பஸ் விட்டேன்.
அதைத்தொடர்ந்து நடந்த விவாதத்தில் ஹரி கிருஷ்ணன் புகைப்படத்துக்கு விளக்கம் கொடுத்தது மட்டுமின்றி...அரிய புகைப்படத்தையும் அனுப்பி வைத்தார்.
அனுப்பிய ஹரி கிருஷ்ணனுக்கும் நன்றி.
‘நன்றி, ‘சித்திர பாரதி’ தொகுத்தவர் திரு ஆர் ஏ பத்மநாபன்’







புதன், 14 செப்டம்பர், 2011
சனி, 3 செப்டம்பர், 2011
உயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.
- தனித்து இருந்தாலும் பாலைவனத்தில் இல்லையல்லவா, உங்கள் வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் உள்ள மற்ற பெண்களிடம் இணக்கமாக இருங்கள். அவர்கள் இது போன்ற சிக்கல்களிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள். - மருத்துவரை அணுகுங்கள் - அவர் மகப்பேறு மருத்துவராக இருப்பது நல்லது. அவர் போதுமான கவுன்சிலிங் தருவார். தன்னிச்சையாக மனபதட்டத்தை குறைக்கும் மருந்துகளையும், ஹார்மோன் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளாதீர்கள் -மருத்துவர் கூறினால்கூட ஹார்மோன் மருந்துகளை தவிர்க்கவும். பிற்பாடு பிரச்சினை எழலாம். - புதிதாக தாயாகும் பெண்களுக்கே உரிய ஒரு தவறான சிந்தனையை விலக்குங்கள். அது என்னவென்றால், 'நான் ஒரு சிறப்பான தாயாக இருப்பேன். என் குழந்தையை மிக சிறப்பாக வளர்ப்பேன்' என்பதுதான். ஏனெனில் இந்த சிந்தனை அனுபவமிக்க மற்றவர்களின் கருத்துக்களை புறந்தள்ளத் தூண்டும். மற்றவர்களை குறை சொல்லத் தூண்டும். 3. இதற்கான கைவைத்தியம், பத்திய உணவு பற்றி தெரிவியுங்கள்:
செல்வந்தர்களே.... கேளுங்கள்!!!
செல்வந்தர் யார்?
செல்வம் நிறைந்தவரெல்லாம் செல்வந்தராகமுடியாது!
நல்ல நட்புகளும், உறவுகளும் நிறைந்தவர் மட்டுமே செல்வந்தராக முடியும்!
காலந்தோறும் செல்வம்.
1. குழந்தைச் செல்வம்!
2. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
3. கல்வியே அழியாத செல்வம்!
4. ஆடு, மாடுகளே செல்வம்!
5. நிலங்களே செல்வம்!
6. பணம் தான் செல்வம்!
என காலந்தோறும் செல்வத்தின் மதிப்பு மாறிக்கொண்டேதான் இருக்கிறது.
ஆசை.
வாழ்ககையி்ல் பொருட் செல்வம் கிடைக்காதவர்கள், செல்வத்தின் மீது ஆசை கொண்டவர்கள் தம் பி்ள்ளைகளுக்கு பெயரிலாவது செல்வம் இருக்கட்டுமே என்று...
செல்வம், அருள் செல்வம்,அன்புச் செல்வம், அறிவுச் செல்வம், ஞானச் செல்வம், செல்வமுரளி, செல்வ கணபதி, செல்வி என்றெல்லாம் பெயர் வைப்பதை வழக்கில் காணமுடிகிறது.
செல்வத்தை எங்கு மறைத்து வைப்பீர்கள்..?
இன்றைய சூழலில் ஊடகங்களில் கேட்கும் தினசரி செய்திகளுள்,
அலைக்கற்றை மோசடி,கறுப்புப் பணம், இலஞ்சம், ஊழல், சுவிசு வங்கி, லோக்பால், போராட்டம், பத்மநாதசாமி, சாய்பாபா என்பன குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. இந்த செய்திகளுக்கான தலைப்புகள் பலவகைப்பட்டிருந்தாலும், பொருள் ஒன்றுதான்....
“செல்வத்தை மறைத்தல்“ என்பதுதான் அது.
அட மூடர்களே செல்வத்தை எங்கே மறைப்பீர்கள்..?
முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கப் பார்க்கிறீர்களே முடியுமா..??
சரி மறைத்தாலும் உங்க உடல் மறைந்தபின் அதை உங்களால் எடுத்தச் செல்ல இயலுமா..??
சங்க இலக்கியத்தில் ஒரு அகப்பாடல்.....
தலைவன், தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாது காலம் தாழ்த்தி வருகிறான். தோழி தலைவனிடம் வாழ்வியல் நீதிகளை எடுத்துரைத்துத் தலைவியைத் தலைவன் மணம் செய்து கொள்ளத் தூண்டுகிறாள். இதுவே பாடலுக்கான களம்.
நெய்தல் நிலப் போர்களம்!
கடற்கறையில் வரிசையாக நிறுத்தப்பட்ட படகுகளே யானைப் படையாக!
அலைகளின் ஒலியே போரில் முழக்கப்படும் பறையொலியாக!
மீன்களுக்காகத் தவமிருக்கும் பறவை இனங்களே படையாகவும் கொண்டு அரசன் பகைவன் மேல் போர்தொடுத்து செல்லுவதைப் போல் வலிய கடலைச் சேர்ந்த நிலத்தை உடையவனே!!
நன்றி மறந்தவன் செல்வம்!
தனக்குக் கற்பித்த ஆசிரியன் துன்பப்படும் சூழலில் அவருக்குத் தன் கைப்பொருளைக் கொடுத்து உதவாதவனுடைய செல்வம்...?
நெறிமுறை மறந்தவன் செல்வம்!
தான் கற்ற வி்த்தையைத் தவறான வழியில் பயன்படுத்தியவனுடைய செல்வம்...?
உதவியை மறந்தவன் செல்வம்!
தான் துன்புற்றபோது தனக்கு உதவி செய்தவர் தாம் துன்புறும் போது உதவாதவனுடைய செல்வம்....?
ஆகிய இவையெல்லாம் தாமாகவே தேய்ந்து அழிந்து போகக் கூடியவை. அதுமட்டுமின்றி செய்நன்றி மறந்தவர் உடலைவிட்டு உயிர் பிரிந்தாலும் தாம் செய்த தவறுக்கான துன்பத்தை எவ்வழியிலாவது அடைவது உறுதி!!
உறவுகளை வருத்தும் செல்வம்!
உறவினர்கள் மனம் வருந்தும் படியாகத் தேடிக் குவித்த செல்வங்கள் எல்லாம் முயற்சியில்லாத மன்னனின் குடிகள் எவ்வாறு அழியுமோ அதுபோல அழிந்துபோகும்.
வாக்குத் தவறியவன்!
கொடுத்த வாக்கைக் காப்பாற்றாதவன் தானாகவே தேய்ந்துபோவான். பொய்த்த இந்தத் தீவினையானது மறுபிறப்பிலும் வாளைப்போலக் கூர்மையாக அவனை அழிக்காமல் விடாது.
ஒப்பிட்டுத் தன்மதிப்பீடு செய்துகொள்.
தலைவ..
செய்நன்றிக் கேடும், வாக்குத் தவறுதலும் எத்தகைய அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை இதுவரை நான் சொன்னதிலிருந்து உன்னால் உணரமுடிகிறதா..? களவுக்காலத்தில் தலைவியைக் காண நீ என்ன பாடுபட்டாய் ? அந்த நன்றியை மறக்கலாமா? தலைவியை விரைவில் மணப்பேன் என்ற வாக்குத் தவறுதல் சரியா..?
வரைவு கடாவுதல்.
தன் பகை வேந்தனோடு சினந்த அரசன், பகை வேந்தன் தம் கோட்டையை முற்றுகையிட்டபோது எத்தகைய வருத்தம் கொள்வானோ அதுபோலத் தலைவியும் உன் வரைவுக்காக் (திருமணம்) காத்திருக்கிறாள். அதனால் விரைந்து தலைவியை மணப்பாய் தலைவ! என்கிறாள் தோழி.
பாடல் இதோ..
நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக,
கரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக,
அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப! கேள்:
கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான், விச்சைக்கண்
தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால், 5
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்
எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்;
கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல், தமியவே தேயுமால்,
சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின்; மற்று அவன் 10
வாள் வாய் நன்று ஆயினும், அஃது எறியாது விடாதே காண்;
ஆங்கு
அனைத்து, இனி பெரும! அதன் நிலை; நினைத்துக் காண்:
சினைஇய வேந்தன் எயிற்புறத்து இறுத்த
வினை வரு பருவரல் போல, 15
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே.
கலித்தொகை -149.
வரைவு நீட்டித்துழித் தலைவியது ஆற்றாமை கூறித் தலைவனை வரைவு காடாயது.
பாடல் வழியே..
1. ஒரு அகப்பாடலில் தலைவனின் நிலப்பகுதியைச் சொல்லவந்த தலைவி கடலே போர்க்களமாக, படகுகளே யானைப்படையாக, அலையே பறையாக, பறவையினங்களே படையாகக் கற்பனை செய்து காட்சிப்படுத்தியமை இயற்கையோடு இயைந்த அவர்தம் வாழ்க்கைக்குச் சான்றாகத் திகழ்கிறது.
2. செய்நன்றி மறத்தல், வாக்குத் தவறுதல் உள்ளிட்ட தவறுகளைச் சுட்டி தலைவனை உணரவைக்க எண்ணிய தோழி சொல்லும் பல்வேறு நீதிகருத்துக்கள், இன்றும் நம் வாழ்வி்ல் பின்பற்றத் தக்கனவாகவே உள்ளன.
3. செல்வம் நிலையில்லாதது, அழிந்துபோகக்கூடியது, மறைத்து வைக்கமுடியாதது என்ற தோழியின் கூற்று ஒவ்வொருவரும் தம் வாழ்வில் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.
தமிழ் விரிவுரையாளர்
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்ககோடு
நாமக்கல் மாவட்டம்
தமிழ்நாடு
இந்தியா.
கூடங்குளம் அணுமின் நிலையம் :பில்டிங் வீக் ,பேஸ்மென்ட் அதைவிட வீக் !
தங்கத்தின் மீது ஆசையா.. வேண்டாம் விபரீதம்...
நமீதாவும்- பகுத்தறிவு ஏட்டின் பிரச்சாரமும்?
அன்னா ஹஸாரேவை யாரெல்லாம் திட்டி தீர்க்க தயாராக இருக்கிறார்களோ - அவர்கள் எடுக்கும் வாந்தியை - அப்படியே அள்ள தயாராக இருக்கிறார்கள் சிலர். அந்த பட்டியலில் பகுத்தறிவு ஏடு விடுதலையும் உள்ளது போலும். "ஊழலை எதிர்க்கவும் மாட்டோம். ஊழல் எதிர்ப்பாளர்களையும் எதிர்க்க விட மாட்டோம்" என்பது தான் அவர்களின் சீரிய கொள்கை. ஸ்பெக்டரம் ஊழல் முறைகேடு புரிந்தவர்கள், நில அபகரிப்பு வேலை செய்தவர்களின் பங்காளிகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
அய்யா கி.வீரமணியின் விடுதலை ஏட்டிற்கு நாளும் ஒருவர் அன்னா ஹஸாரேவை விமர்சிக்கும் செய்தியை வெளியீட்டாக வேண்டும். இல்லையென்றால் தூக்கம் வராது. அந்த வகையில் - அன்று யாரும் அன்னா ஹஸாரேயை திட்டவில்லை போலும். ஆனாலும் விடுமா விடுதலை ஏடு. தேடி பிடித்து கவர்ச்சி புயல், கலைஞரின் மானாட மயிலாட புகழ் நமீதாவின் பேச்சை படம் பிடித்து போட்டு புண்ணியம் தேடி கொண்டது.
பெரும்பாலும் விடுதலை ஏட்டின் எந்த செய்திக்கும் கருத்துரை வராது. ஆனால் நமீதா பேச்சு என்றதும் இரண்டு கருத்துரை. இதை தான் விரும்பினார்கள் போலும். திராவிட கழகத்தின் குட்டியும், இந்தி எதிர்ப்பு பீரங்கியுமான திராவிட முன்னேற்ற கழகம் - இந்தி குஷ்பூவை வைத்து திராவிடத்தையும், தமிழையும் வளர்க்க அரும்பாடுபட்டு பதினாறடி பாயும் போது, தாய் கழகமான திராவிட கழகம் எட்டடியாவது பாய்ந்தால் தானே மரியாதையாக, பெருமையாக இருக்கும்.
அந்த வகையில் கருஞ்சட்டைகளின் ஏடு விடுதலை - அன்னா ஹசாரேவை பற்றி கருத்து தெரிவிக்க இந்தி நமீதாவை குஜராத்திலிருந்து அழைத்துள்ளது. அய்யா பெரியார் சொன்னார். "தமிழகத்தை பிடித்த தரித்திரத்தில் சினிமாவும் ஒன்று" என்று. ஆனால் அதெல்லாம் பேச்சளவில் தான். கழகங்கள் சாவகாசமாக அதை மறந்து விடும். புத்திமதி அடுத்த கட்சிக்காரர்களுக்கு தான். திராவிட கழகங்களுக்கு அல்ல.பகுத்தறிவுகளின் உலகளாவிய சிந்தனைகளை வெளிப்படுத்த - கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்களை விட ஹாலிவுட் நட்சத்திரங்கள் தானே சரியாக இருக்கும்.
அவ்வப்போது திரைக்கலைஞர்களை காக்கா பிடிப்பதற்கு, தேர்தல் நேரத்தில் பயன் படுத்தி கொள்வதற்கு - திராவிட கழகங்கள் என்றும் தவறியதோ, தயங்கியதோ இல்லை. இப்போதைக்கு அவர்கள் கண்களுக்கு "விஜய்காந்த்" மட்டுமே சினிமாகாரர். "அன்னா ஹஸாரேக்கு ஊழல் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது" என்று கேட்டார்கள் கருஞ்சட்டையாளர்கள். அவர்களிடம் மக்கள் திருப்பி கேட்கிறார்கள். "அன்னா ஹஸாரேயை பற்றி பேச நமீதாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. வேறு ஆளே கிடைக்கவில்லையா" என்று. அதில் நியாயமிருக்கிறது தானே.
எந்த சினிமா கலைஞர்களாவது - பொது பிரச்சனைக்கு வாய் திறந்தாலும் "என்ன தகுதி உள்ளது அவர்களுக்கு" என்று கேட்க தயங்குவதே இல்லை பகுத்தறிவு. நமீதாவுக்கு மட்டும் என்ன தகுதி இருக்கிறது என்று யோசித்தார்களா? "மாமன்ஸ், மச்சான்ஸ்" என்று நமீதா கெஞ்சலுடன் பேசுவதில் ஈர்க்கப் பட்டுவிட்டார்களோ என்னவோ. நமீதா பேசிய பேச்சை பார்ப்போம். "அன்னாஹசாரேவின் போராட்டத்தால் எந்தப் பலனும் இல்லை "என்று பெரிய தீர்க்கதர்சி போல கண்டு பிடித்து சொன்னதை தான் விடுதலை ஏடு பெருமையாக பிரசுரித்து உள்ளது... மேலும் நமீதா சொல்கிறார்.."
ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. " இப்படியே சொல்லி கொண்டிருந்தால் ஊழல் பூனைக்கு மணி கட்டுவது யாரம்மா?
மேலும் சொல்கிறார். "அன்னா ஹசாரேவின் போராட்டம் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது." என்று. அன்னா ஹஸாரே என்ன சினிமா நடிகையா இல்லை சாமியாரா இல்லை அரசியல்வாதியா? பரபரப்பு செய்திக்கும், கிளுகிளுப்பு செய்திக்கும் அடி போட... அப்படி பார்த்தால் - நாளும் ஒரு போராட்டம் நடத்தும் பகுத்தறிவாளர்கள் பரபரப்புக்கு தான் போராட்டம் நடத்துகிறார்களா.
அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகர்களை பார்த்து பகுத்தறிவு இப்படி கேள்வி கேட்கிறது. "ஊதியமாக கருப்பு பாதி, வெளுப்பு பாதி என்று வாங்குபவர்கள் தான் ஊழல் எதிர்ப்பாளர்களா" என்று. பொதுமக்கள் நமீதா போன்ற நடிகைகளை பார்த்து - உண்மையான பகுத்தறிவுடன் இப்படி கேட்கிறார்கள் "கருப்பில் பாதி, வெளுப்பில் பாதி என்று ஊதியம் வாங்கும் நட்சத்திரங்கள் அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை விமர்சிப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லையே" என்று.
கருப்பில் பாதி, வெளுப்பில் பாதி வாங்கும் நட்சத்திரங்களுக்கு அன்னா ஹஸாரே பிடிக்காமல் போனதில் ஆச்சர்யமில்லை. பகுத்தறிவுக்கும் பிடிக்காமல் போனதில் தான் ஆச்சரியம். ஊழல் எதிர்ப்புக்கும் ஆயிரம் உள் நோக்கம், வெளி நோக்கம் கற்பிப்பவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
தமக்கு பிடிக்காதவர்களை விமர்சிக்க - யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கருத்துக்களை வாங்கி போடுவார்கள் போலும். மற்றவர்களின் தகுதி பற்றி பேசுபவர்கள் - எப்போதும் தங்களின் தகுதி பற்றி மறந்து தான் போகிறார்கள்.ஊழலை ஒழிக்க "முடியாது, கஷ்டம், ஆகாது" என்று சொன்னால் அது பகுத்தறிவா? ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருக்கும் சாதியையே ஒழிக்க முடியும் என்று நம்பும் போது, அரசியல்வியாதிகளின் ஊழலை ஒழிப்பதா கஷ்டம். சிந்திக்க வேண்டாமா?
நமீதாவும்- பகுத்தறிவு ஏட்டின் பிரச்சாரமும்?
அன்னா ஹஸாரேவை யாரெல்லாம் திட்டி தீர்க்க தயாராக இருக்கிறார்களோ - அவர்கள் எடுக்கும் வாந்தியை - அப்படியே அள்ள தயாராக இருக்கிறார்கள் சிலர். அந்த பட்டியலில் பகுத்தறிவு ஏடு விடுதலையும் உள்ளது போலும். "ஊழலை எதிர்க்கவும் மாட்டோம். ஊழல் எதிர்ப்பாளர்களையும் எதிர்க்க விட மாட்டோம்" என்பது தான் அவர்களின் சீரிய கொள்கை. ஸ்பெக்டரம் ஊழல் முறைகேடு புரிந்தவர்கள், நில அபகரிப்பு வேலை செய்தவர்களின் பங்காளிகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
அய்யா கி.வீரமணியின் விடுதலை ஏட்டிற்கு நாளும் ஒருவர் அன்னா ஹஸாரேவை விமர்சிக்கும் செய்தியை வெளியீட்டாக வேண்டும். இல்லையென்றால் தூக்கம் வராது. அந்த வகையில் - அன்று யாரும் அன்னா ஹஸாரேயை திட்டவில்லை போலும். ஆனாலும் விடுமா விடுதலை ஏடு. தேடி பிடித்து கவர்ச்சி புயல், கலைஞரின் மானாட மயிலாட புகழ் நமீதாவின் பேச்சை படம் பிடித்து போட்டு புண்ணியம் தேடி கொண்டது.
பெரும்பாலும் விடுதலை ஏட்டின் எந்த செய்திக்கும் கருத்துரை வராது. ஆனால் நமீதா பேச்சு என்றதும் இரண்டு கருத்துரை. இதை தான் விரும்பினார்கள் போலும். திராவிட கழகத்தின் குட்டியும், இந்தி எதிர்ப்பு பீரங்கியுமான திராவிட முன்னேற்ற கழகம் - இந்தி குஷ்பூவை வைத்து திராவிடத்தையும், தமிழையும் வளர்க்க அரும்பாடுபட்டு பதினாறடி பாயும் போது, தாய் கழகமான திராவிட கழகம் எட்டடியாவது பாய்ந்தால் தானே மரியாதையாக, பெருமையாக இருக்கும்.
அந்த வகையில் கருஞ்சட்டைகளின் ஏடு விடுதலை - அன்னா ஹசாரேவை பற்றி கருத்து தெரிவிக்க இந்தி நமீதாவை குஜராத்திலிருந்து அழைத்துள்ளது. அய்யா பெரியார் சொன்னார். "தமிழகத்தை பிடித்த தரித்திரத்தில் சினிமாவும் ஒன்று" என்று. ஆனால் அதெல்லாம் பேச்சளவில் தான். கழகங்கள் சாவகாசமாக அதை மறந்து விடும். புத்திமதி அடுத்த கட்சிக்காரர்களுக்கு தான். திராவிட கழகங்களுக்கு அல்ல.பகுத்தறிவுகளின் உலகளாவிய சிந்தனைகளை வெளிப்படுத்த - கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்களை விட ஹாலிவுட் நட்சத்திரங்கள் தானே சரியாக இருக்கும்.
அவ்வப்போது திரைக்கலைஞர்களை காக்கா பிடிப்பதற்கு, தேர்தல் நேரத்தில் பயன் படுத்தி கொள்வதற்கு - திராவிட கழகங்கள் என்றும் தவறியதோ, தயங்கியதோ இல்லை. இப்போதைக்கு அவர்கள் கண்களுக்கு "விஜய்காந்த்" மட்டுமே சினிமாகாரர். "அன்னா ஹஸாரேக்கு ஊழல் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது" என்று கேட்டார்கள் கருஞ்சட்டையாளர்கள். அவர்களிடம் மக்கள் திருப்பி கேட்கிறார்கள். "அன்னா ஹஸாரேயை பற்றி பேச நமீதாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. வேறு ஆளே கிடைக்கவில்லையா" என்று. அதில் நியாயமிருக்கிறது தானே.
எந்த சினிமா கலைஞர்களாவது - பொது பிரச்சனைக்கு வாய் திறந்தாலும் "என்ன தகுதி உள்ளது அவர்களுக்கு" என்று கேட்க தயங்குவதே இல்லை பகுத்தறிவு. நமீதாவுக்கு மட்டும் என்ன தகுதி இருக்கிறது என்று யோசித்தார்களா? "மாமன்ஸ், மச்சான்ஸ்" என்று நமீதா கெஞ்சலுடன் பேசுவதில் ஈர்க்கப் பட்டுவிட்டார்களோ என்னவோ. நமீதா பேசிய பேச்சை பார்ப்போம். "அன்னாஹசாரேவின் போராட்டத்தால் எந்தப் பலனும் இல்லை "என்று பெரிய தீர்க்கதர்சி போல கண்டு பிடித்து சொன்னதை தான் விடுதலை ஏடு பெருமையாக பிரசுரித்து உள்ளது... மேலும் நமீதா சொல்கிறார்.."
ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. " இப்படியே சொல்லி கொண்டிருந்தால் ஊழல் பூனைக்கு மணி கட்டுவது யாரம்மா?
மேலும் சொல்கிறார். "அன்னா ஹசாரேவின் போராட்டம் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது." என்று. அன்னா ஹஸாரே என்ன சினிமா நடிகையா இல்லை சாமியாரா இல்லை அரசியல்வாதியா? பரபரப்பு செய்திக்கும், கிளுகிளுப்பு செய்திக்கும் அடி போட... அப்படி பார்த்தால் - நாளும் ஒரு போராட்டம் நடத்தும் பகுத்தறிவாளர்கள் பரபரப்புக்கு தான் போராட்டம் நடத்துகிறார்களா.
அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகர்களை பார்த்து பகுத்தறிவு இப்படி கேள்வி கேட்கிறது. "ஊதியமாக கருப்பு பாதி, வெளுப்பு பாதி என்று வாங்குபவர்கள் தான் ஊழல் எதிர்ப்பாளர்களா" என்று. பொதுமக்கள் நமீதா போன்ற நடிகைகளை பார்த்து - உண்மையான பகுத்தறிவுடன் இப்படி கேட்கிறார்கள் "கருப்பில் பாதி, வெளுப்பில் பாதி என்று ஊதியம் வாங்கும் நட்சத்திரங்கள் அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை விமர்சிப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லையே" என்று.
கருப்பில் பாதி, வெளுப்பில் பாதி வாங்கும் நட்சத்திரங்களுக்கு அன்னா ஹஸாரே பிடிக்காமல் போனதில் ஆச்சர்யமில்லை. பகுத்தறிவுக்கும் பிடிக்காமல் போனதில் தான் ஆச்சரியம். ஊழல் எதிர்ப்புக்கும் ஆயிரம் உள் நோக்கம், வெளி நோக்கம் கற்பிப்பவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
தமக்கு பிடிக்காதவர்களை விமர்சிக்க - யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கருத்துக்களை வாங்கி போடுவார்கள் போலும். மற்றவர்களின் தகுதி பற்றி பேசுபவர்கள் - எப்போதும் தங்களின் தகுதி பற்றி மறந்து தான் போகிறார்கள்.ஊழலை ஒழிக்க "முடியாது, கஷ்டம், ஆகாது" என்று சொன்னால் அது பகுத்தறிவா? ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருக்கும் சாதியையே ஒழிக்க முடியும் என்று நம்பும் போது, அரசியல்வியாதிகளின் ஊழலை ஒழிப்பதா கஷ்டம். சிந்திக்க வேண்டாமா?
நான் ரொம்ம்மம்ம்ம்ப பிசியாக்கும் என்று உங்களை நினைக்க வேண்டுமா? சில யோசனைகள்.
2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.
3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை
உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.
4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும்.கூடவே
நகத்தையும் கடித்து வையுங்கள்.
6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.
7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.
8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள்.அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.
9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்
பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.
11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.
12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச
நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங்
போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.
13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது,மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.
14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.
15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள்.போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.
மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.
17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.
18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்
இந்த மெயிலை எனக்கு அனுப்பினது யாரு?
Doctor -- வைத்யநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
North Indian Lawyer -- பஞ்சாபகேசன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Pediatrist -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோ
Marriage Counselor -- கல்யாணசுந்தரம்
Ophthalmologist --கண்ணாயிரம்
ENT Specialist -- நீலகண்டன்
Diabetologist -- சக்கரபாணி
Nutritionist -- ஆரோஞசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Mentalist -- புதிசிகாமணி
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்ரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சையப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- கொண்டியாப்பன்
Beggar -- பிச்சை
Bartender -- மதுசுதன்
Alcoholic -- கள்ளபிரான்
Exhibitionist -- அம்பலவாணன்
Fiction writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால் ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer -- நாகமுர்த்தி
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலராமன்
Sumo Wrestler -- குண்டு ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எத்திராஜ்
Batsman -- Dhandiappan
Bowler -- Balaji
Spin Bowler -- Thirupathi
Female Spin Bowler -- Bala Thirupura Sundari
Driver -- Sarathy
Attentive Driver -- Parthasarathy
Flutist -- Muralidhara
வியாழன், 1 செப்டம்பர், 2011
கிறிஸ்தவ முஸ்லிம் வலைத் தீவிரவாதிகள் – 5
இந்த பதிவு தொடர்பான முந்தைய நான்கு பதிவுகள்.
போலி மதச்சார்பின்மை. வலைக்குழுமங்களில் மதச்சண்டை நடப்பது சர்வ சாதாரணம். இதில் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள், பகுத்தறிவு பேசுபவர்கள் என பல தரங்கள் உண்டு. இந்துக்கள் சார்பாக இந்துக்கள் மட்டுமே பேசுவார்கள் ஆனால் இந்துக்களையும் இந்து மதத்தையும் தாக்கி எழுத, கிறித்தவர்கள், முஸ்லீம்கள், பகுத்தறிவுவாதிகள், மேலும் பகுத்தறிவாளர் வேடமிடும் பிற மதத்தவர் என எல்லோரும் ஒன்று கூடி விடுவார்கள். முஸ்லீம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்துக்கள் பெரும்பாலும் பகுத்தறிவு வாதம், நட்புக்கு உதவி என்ற ரீதியில் முஸ்லீம்களுக்கு ஆதரவளிப்பார்கள். உண்மையில், இந்த பகுத்தறிவாளர்களின் போர்வையில் இருப்பதெல்லாம் இந்து மதம் தவிர்தத பிற மத வெறியர்களின் கலவையே. இவர்களது வாதம் என்னவென்றால் இவர்கள் மதச்சார்பற்றவர்களாம், முற்போக்கு சிந்தனாவாதிகளாம். பகுத்தறிவுப்படி பேசுபவர்களாம். இவர்களின் பகுத்தறிவு இந்து மதத்துக்கு எதிராக மட்டுமே சிந்திக்கும், இந்து சம்பிரதாயங்களை மட்டுமே விமர்சிக்கும். இஸ்லாம், கிறித்துவ மதத்தைக் கேள்வி கேட்கும் விதத்தில் சிந்திக்கவே சிந்திக்காது. இவர்கள் மொழியில் இதற்குப் பெயர் பகுத்தறிவு மற்றும் மதச்சார்பின்மையாம்!!!!!
பகுத்தறிவாளர்களில் கடவுளே கிடையாது, தீமிதித்தல் காட்டுமிராண்டித்தனம் என்றெல்லாம் பிதற்றும் திராவிட வியாதிகள், பெரியார் வியாதிகள் உண்டு. இந்த வியாதிகள் பெரும்பாலும் இந்துக்களாகவே இருப்பார்கள். ஏதோ ஒரு நம்பிக்கைக் குறை அவ்வளவுதான். ஆனால் முஸ்லீம்களும் கிறித்துவர்களும் இந்த பகுத்தறிவாளர் போர்வையில் ஒளிந்திருப்பார்கள் பாருங்கள், பேச்செல்லாம் விடம். இவர்களுக்கு மதத்தைப் பற்றியும் கிறித்துவ மதத்தைப் பற்றியும் பேசினால் மட்டும் பகுத்தறிவு வேலை செய்யாது. எங்கள் மதம், எங்கள் மார்க்கம், எங்கள் மத நியதி, ஏக இறைவன் என்றெல்லாம் பேசுவார்கள். இந்துக்கள் எதிர்வாதம் புரியும் போது, இந்துமத சம்பிரதாயங்களைக் காட்டி அது பகுத்தறிவுக்கு ஒத்து வராது என்று உளறுவார்கள். குரானில் சொல்லியிருக்கிறது, பைபிளில் இருக்கிறது என்று அவர்களின் மதச்சார்புடைய வலைச்சுட்டிகளைப் பட்டியல் இடுவார்கள்.
இந்த சுட்டிகளைக் காட்டும் வேலை ஒன்றும் புதிதில்லை. “ஏசு அழைக்கிறார், பரிசுத்த ஆவியின் பூப்புனித நீராட்டு விழா, விசேஷித்த வேதபாடக் கூச்சல்கள்” என்று சந்து பொந்தெல்லாம் துண்டுப் பிரசுரம் நீட்டும் அல்லேலுயா கும்பல்களின் வேலை போன்றதொரு மதமாற்ற பிரச்சாரம்தான் இவையெல்லாம். மூத்திர சந்து முனைகளில் துண்டுப் பிரசுரங்களை நீட்டிய காலம் மலையேறி, இணையத்தின் சந்து பொந்துகளில் மத மாற்றக் கொக்கி போடுகிறார்கள். இஸ்லாமைப் பற்றி தெரிந்து கொள்ள வாருங்கள் என்று ‘அன்பொழுக’ அழைப்பார்கள். எங்கள் இஸ்லாமில் சாதி பேதம் கிடையாது, இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள இந்த சுட்டிகளைப்பாருங்கள் என்று இணைய தள சுட்டிகளை பட்டியல் இடுவார்கள். போங்கடா டேய்! இஸ்லாமில் இல்லாத பிரிவினைகளா? பிரிவினை என்றாலே இஸ்லாம் தானே.
இன்னொரு முக்கிய விடயம், சில தமிழ் வலைக்குழுமங்களில் முஸ்லீம்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகள் இன்றி சாதாரணமாக ஏதேனும் சொன்னால் கூட அது மட்டுறுத்தப்பட்டு விடும், வெளிவராது. கேட்டால் “வீண் விவாதங்களைத் தவிர்க்க, மதப் பிரச்சினைகளைத் தவிர்க்க, நண்பர்களுக்குள் மத துவேஷம் கூடாது” என்றெல்லாம் காரணம் சொல்வார்கள். இவைதான் காரணம் எனில் மத ரீதியான இடுகைகள் எதையுமே அனுமதிக்காமல் இருக்கலாமே? அப்படிச் செய்ய மாட்டார்கள், செய்யவும் முடியாது. செய்தால் குழுமத்தில் ஈயாடும். குழுமங்களில் கும்மி அடிக்க இவர்களுக்கு கிடைத்த விடயம் இந்து மதம் தான். இந்து மதத்தையும் பிராமணர்களையும் பகடைக்காய்களாக்கி விளையாடுவதே இந்த வலைத்தீவிரவாதிகளின் விளையாட்டு. அதில் குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகிப்பது பகுத்தறிவு என்னும் மூட மதி மயக்கத்திலிருக்கும் இந்துக்கள் தான்.
அறிவு என்பதே நல்லது எது தீயது எது? எது சரி எது தவறு, எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்று ஆய்ந்து நல்லதை, சரியானதை தேர்ந்தெடுக்கும் மனிதனின் மனப்பாங்கு, அவ்வளவு தான். அப்புறம் என்ன மண்ணாங்கட்டி பகுத்தறிவு? உண்மையில் பகுத்தறிவும் கிடையாது ஒரு மசிரும் கிடையாது. யாரோ பிராமணர்களால் வஞ்சிக்கப்பட்ட ஒருவர் தனது கருத்துக்களை பகுத்தறிவு என்ற பெயரில் உளறி விட்டுப் போய் விட்டார். அவருக்கு பிடிக்காத ஒரு விடயத்தை அவருக்கு பிடிக்காது என்ற காரணத்தால் உரக்கச் சொன்னார். அவரது நேரமும் நன்றாக இருந்தது, ஊரெங்கும் கேட்டது. நம் மக்களைப் பற்றித்தான் தெரியுமே….. அவருக்கு அடிவருட ஆரம்பித்து விட்டார்கள். பார்ப்பனருக்கு அடிவருடாதீர்கள் என்ற பேச்சில் மயங்கி திராவிட வியாதிகளுக்கு அடிவருடிக் கொண்டிருக்கிறார்கள்.
Filed under: வலைத்தீவிரவாதிகள்













